Friday, November 6, 2009

எழுச்சி தமிழர் .தொல்.திருமாவளவன்

அடங்க மறு ! அத்து மீறு ! திமிறி எழு ! திருப்பி அடி !

மக்கள் விடுதலை மண்டியிட்டுப் பெறுவதல்ல!

மடுவை மலையாக்கு ! மண்ணைச் சிவப்பாக்கு !

அண்ணலே இனியும் நாங்கள் ஆடுகளல்ல !
இளிச்சவாயர் கூட்டமும் அல்ல !
சீறிப் பாயும் விடுதலைச் சிறுத்தைகள்.

உன்னைப் படி ! தாய் மண்ணைப் பிடி !

படையை பெறுக்கு ! தடையை நொறுக்கு !

அடக்க நினைத்திடும் சிறைச்சாலை
அது அரசியல் கற்பிக்கும் பாடச்சாலை !

படையை பெறுக்கு ! தடையை நொறுக்கு !

திருத்தி எழுதாமல் தீர்ப்பு மாறாது !
திருப்பி அடிக்காமல் தீர்வு கிடைக்காது !

தலை நிமிர சேரி திரளும் ! அன்று தலை கீழாய் நாடு புரளும் !

சேரியில் புரட்சியின் சினை வெடிக்கும் ஆதிக்க வெறி
சாதியத்தின் தலை நறுக்கி பகை முடிக்கும் !

படை நடுங்கிட சீறி எழும்பு - நாளை
பழி தீர்த்திடும் உன் வீரத்தழும்பு !

நெருக்கடிகள் சூழ்ந்த போதிலும் கொள்கை நெறிப்படி வாழ்தல் வீரம் !
நெருப்பலைக்குள் வீழ்ந்த போதும் அடிமை நெறிமீறி பாய்தல் வீரம் !

பாதையில் குறுக்கிடும் தடை மீறு !
அதிரடி பாய்ச்சலில் படைத்திடு வரலாறு !

கேட்பது பிச்சை ! மீட்பது உரிமை !

எத்தனைக் காலந்தான் பொறுத்திறுப்பாய் - அட
எழுந்திட வேண்டாமோ எரிநெருப்பாய் !

எம் பதிவுகள் வெறும் கண்ணீர் துளிகளல்ல
கலகத்தின் சினைகள் !

அச்சம் தவிர்த்து சினந்து கிளம்பு - சாதியின்
உச்சந்தலையில் இடியாய் இறங்கு !

ஒரு நாள் நிச்சயம் விடியும் - அது
உன்னால் மட்டுமே முடியும் !

சேரிப்புயல் ஒரு நாள் வரம்பு மீறும் ! வரலாறு மாறும் !

ஒப்பாரி ஒலங்கள் சேரிக்கு மட்டுமே சொந்தமில்லை !

பொய் வழக்கும் கொடுஞ்சிறையும் போராளிகளை என்னச் செய்யும்.

கடைசி மனிதனுக்கும் சனநாயகம் !
எளியமக்களுக்கும் அதிகாரம் !

கண்டன ஆர்ப்பாட்டம்

குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் பகலவனை விடுவிக்க வலியுறுத்தி திருவண்ணாமலையில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் காவல்துறையின் பொய்வழக்குகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாலளர் மோகன் தலைமை தாங்கினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் குண்டர் சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்கப்பட்ட பகலவன் மற்றும் அவருடன் கைதான 40 பேரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி சிந்தனைச்செல்வன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு, காவல்துறைக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர்.

தொல்.திருமாவளவன்

தமிழக,புதுச்சேரி மீனவர்களை ஒருங்கிணைத்து நாடு தழுவிய அளவில் மாபெரும் போராட்டம் -திருமா

தமிழக,புதுச்சேரி மீனவர்களை ஒருங்கிணைத்து


நாடு தழுவிய அளவில் மாபெரும் போராட்டம்

தொல். திருமாவளவன் அறிவிப்பு



இந்தியக் கடலிலே ஓரமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் 18 பேரை சிங்களக் கடற்படையினர் சுற்றி வளைத்துக் கடத்திச் சென்றுள்ளனர். சர்வதேச எல்லையைத் தாண்டி இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களின் வலைகளை அறுத்துச் சேதப்படுத்தியுள்ளனர். பிடித்து வைத்துள்ள மீன்களையும் அவர்தம் ஐந்து படகுகளையும் கைப்பற்றியதுடன் மீனவர்களையும் தாக்கிக் கைது செய்துள்ளனர். சிங்களக் காடையர்களின் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்கதையாக நீடித்து வருகின்றன.

இந்திய ஆட்சியாளர்கள் சிங்களக் காடையர்களோடு கூடிக் குலாவுவதிலேயே ஆர்வம் காட்டி வருகின்றனர். 1983லிருந்து தமிழக மீனவர்களுக்கு எதிராக சிங்கள இனவெறிக் கும்பல் நடத்திவரும் துப்பாக்கிச் சூடு மற்றும் கைது நடவடிக்கைகளை இந்திய அரசு ஒரு முறைகூடக் கண்டித்ததே இல்லை.


தமிழக மீனவர்களையும் அவர்தம் மீன் பிடிக்கும் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்பதில் துளியளவில் முனைப்புக் காட்டியதேயில்லை. தற்போதும் அதே மெத்தனமான போக்கையே இந்திய அரசு கடைபிடித்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரிப் பகுதிகளைச் சார்ந்த 18 மீனவர்கள் கடத்தப்பட்டு 2 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் அவர்களை மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டதாகத் தெரியவில்லை.


தமிழக மீனவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் அக்கறை இல்லாவிட்டாலும் இந்திய இறையாண்மையைக் காப்பாற்றுவதற்காகவாவது இந்திய ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டாமா? சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டி இந்திய கடல் எல்லைக்குள் சிங்களக் காடையர்கள் அத்துமீறி நுழைவதை இந்திய அரசு எப்படி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது?


இதனை, இந்திய அரசின் கையாலாகாத்தனத்தை வெளிப்படுத்துவதாக எடுத்துக்கொள்வதா? அல்லது இந்திய அரசும் சிங்கள அரசும் வேறுவேறல்ல என்று இந்திய ஆட்சியாளர்கள் கருதுவதாக எடுத்துக்கொள்வதா? சிங்கள இனவெறியர்களின் தமிழின விரோதப் போக்கிற்கு இந்திய அரசு வெளிப்படையாகவே துணை நிற்க முனைகிறது என்பதை உணர முடிகிறது. இப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிகவும் வன்மையாக கண்டிக்கிறது. கடத்தப்பட்ட 18 மீனவர்களையும் மீட்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் வற்புறுத்துகிறது.


இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர் சமூகத் தலைவர்களை ஒருங்கிணைத்து நாடு தழுவிய அளவில் விடுதலைச் சிறுத்தைகள் முன்னின்று மாபெரும் போராட்டத்தை நடத்தும் எனத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்

தொல் . திருமாவளவன்

அண்ணன் தமிழின போராளீ தொல்.திருமாவளவன்

தமிழக மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்கவேண்டும் -திருமா கோரிக்கை

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்.பி.யுமான தொல்.திருமாவளவன்,

சர்வதேச கடல் எல்லையைதாண்டி இந்திய எல்லைக்குள் நுழைந்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியை சேர்ந்த 18 மீனவர்களை சிங்கள கடற்படையினர் கடத்திச்சென்றுள்ளனர். சிங்கள கடற்படையினரின் இந்த அட்டூழியம் தொடர்கதையாக நீடிக்கிறது. சிங்கள கடற்படையினரின் துப்பாக்கி சூட்டில் 1983 ம் ஆண்டில் இருந்து இதுநாள் வரையில் 300 க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு முறைகூட இந்திய அரசு சிங்கள் அரசை கண்டிக்கவில்லை. மாறாக சிங்கள அரசுடன் கூடிக்குலவுவதையே கடமையாக கொண்டுள்ளனர்.

சிங்கள அரசை எதிர்க்கும் துணிவு மத்திய அரசுக்கு இல்லை. சிங்கள கடற்படையினரால் கடத்திசெல்லப்பட்ட 18 மீனவர்களை மீட்பதற்காக நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அற்ற நிலை தொடருகிறது. மீனவர்களின் பாதுகாப்புக்காக இல்லாவிட்டாலும், இந்திய இறையாண்மையை பாதுகாப்பதற்காவது மத்திய அரசு அக்கரை காட்டவேண்டும்.

தமிழக மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்கவேண்டும் என்ற கருத்தை விடுதலை சிறுத்தைகள் நீண்டகாலமாகவே சொல்லி வருகிறது. மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்கி அதற்கான பயிற்சியையும் மத்திய அரசு வழங்கவேண்டும். தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக வருகிற பாராளுமன்ற கூட்டத்தொடரில் குரல் எழுப்புவேன்.

7 ஆண்டுகள் வரை காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசும், தமிழக அரசும் உரிய இழப்பீடு வழங்கவேண்டும்.

காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியில் இருப்பதால் குறைகளை சுட்டிகாட்டாமல் இருக்கமுடியுமா? காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியில் இருப்பதை ஏன் மறுபரிசீலனை செய்யவேண்டும். கூட்டணியில் இருந்து விலகும் பிரச்சினையே இப்போது எழவில்லை என்றார்.